புதுக்கோட்டை
எலுமிச்சை பழம் கிலோ ரூ.80-க்கு விற்பனை
|கீரமங்கலத்தில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எலுமிச்சை பழம்
கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் தென்னை உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் 5 டன் அளவிற்கு எலுமிச்சை பழம் உற்பத்தி செய்யப்பட்டு திருச்சி, சேலம், கோவை, தஞ்சாவூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களும், கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கிலோ ரூ.80-க்கு விற்பனை
கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கீரமங்கலம் விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எலுமிச்சை பழம் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி குறைந்துள்ளதாலும், தேவைகள் அதிகரிப்பதாலும் மேலும் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.