< Back
மாநில செய்திகள்
சிதம்பரத்தில்பானிபூரி தள்ளுவண்டியில் வைத்து கஞ்சா விற்பனை3 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரத்தில்பானிபூரி தள்ளுவண்டியில் வைத்து கஞ்சா விற்பனை3 பேர் கைது

தினத்தந்தி
|
21 March 2023 1:21 AM IST

சிதம்பரத்தில், பானிபூரி தள்ளுவண்டியில் 1¼ கிலோ கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


சிதம்பரம்,

சிதம்பரம் நகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகர போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று நகர பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சின்னகடை தெரு அரசமரம் அருகே 3 பேர் பானிபூரி தள்ளுவண்டியுடன் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் சிதம்பரம் ஓம குளம் ஜமால்நகரை சேர்ந்த உமர்பருக் மகன் முஸ்தபா சுல்தான் (வயது 22), சீர்காழி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் டெல்லி என்கிற கருணாமூர்த்தி (25), உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மேகனா கிராமத்தை சேர்ந்த கள்ளர் மகன் அஜய் என்கிற லாலு சிங் (25) ஆகிய 3 பேர் என்று தெரிந்தது.

3 பேர் கைது

இதி்ல் லாலுசிங்கிற்கு சொந்தமான பானிபூரி தள்ளுவண்டியில் 3 பேரும் சேர்ந்து, அவர்களிடம் கேட்கும் நபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பானி பூரி விற்பனை செய்து கொண்டே, கஞ்சாவையும் விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, தள்ளுவண்டி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் பானிபூரி வண்டியில் கஞ்சா விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்