< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்  போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்    போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை கூறினார்.


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜ், கோவிந்தராஜ் மற்றும் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

அறிவுரை

கூட்டத்தில், விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாதாரண பெட்டிக்கடையில் இருந்து பெரிய கடைகள் வரை அனைத்து கடைகளிலும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். குறிப்பாக மாணவ சமுதாயத்தை நல் வழியில் சீர்படுத்தும் விதமாக பள்ளி- கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். போதைப்பொருட்களை யார் விற்பனை செய்தாலும், கடத்தினாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தொடர்ந்து, போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்கள் விற்பனை இல்லாத மாவட்டமாக மாற்ற போலீசார் அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும் என்று டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்