< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது
|19 Aug 2024 12:49 PM IST
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே ஏ.ஜி.புதூர் மற்றும் குரும்பபாளையம் ரோடு சந்திப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பித்யதார் குர்லா, சுசில்தீப், மற்றும் 16, 15 வயது சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் நவஇந்தியா பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பேரூர் பகுதியை சேர்ந்த விபீஷணன், ஜெய் ஹிந்த் ஆகியோரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.