< Back
மாநில செய்திகள்
செல்லமுத்து மாரியம்மன் கோவில்  திருவிழா
திருச்சி
மாநில செய்திகள்

செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
15 Jun 2022 1:09 AM IST

செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

மலைக்கோட்டை, ஜூன்.15-

திருச்சி சஞ்சய் காந்தி நகரில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 36-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கரக உற்சவ விழா, தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல் சந்தன கருப்புக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் அடைசல் பூஜை எனப்படும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை அம்மனுக்கு முத்து எடுத்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழா, கரகம் முளைப்பாரி ஆற்றில் கரைத்தலுடன் விடையாற்றி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்