< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி - கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏற்பாடு
|4 Sept 2023 1:33 AM IST
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை,
கோவை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் கோவை மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த தற்காப்பு பயிற்சிகளை இனி வரும் நாட்களில் தொடர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.