அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு பெண்கள் தேர்வு
|அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடக்கிறது.
சென்னை,
அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடக்கிறது. நுழைவுச் சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் விண்ணப்பதாரர்கள் சென்னை கோட்டை செயிண்ட் ஜார்ஜ் வளாகத்தில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையான தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற உதவலாம் என்று கூறி ஏமாற்றுபவர்கள், மோசடி செய்பவர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம். கடின உழைப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும் என்று பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.