< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
|5 May 2023 12:30 AM IST
தேனி மாவட்டத்தில் மாநில கூடைபந்து போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க தேனி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 1-1-2007-க்குப் பின் பிறந்தவர்கள் இதில் பங்கேற்க தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வயதுச் சான்றுகளுடன் தேர்வு நடக்கும் நாளில் நேரில் வர வேண்டும். இத்தகவலை தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின் நந்தா தெரிவித்தார்.