< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தினத்தந்தி
|
31 July 2022 12:53 AM IST

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் மாநில அளவிலான கபடி போட்டி வருகிற 18, 19-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து 250 கபடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் அணி, அணியாக போட்டி நடத்தப்பட்டு சிறந்த வீரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்பின் அந்த பயிற்சியில் இருந்து 12 வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் புதுக்கோட்டை அணி சார்பில் பங்கேற்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்