< Back
மாநில செய்திகள்
ஜூனியர் தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

ஜூனியர் தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

தினத்தந்தி
|
29 Aug 2023 12:15 AM IST

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி நடக்கிறது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி நடக்கிறது.

வீரர்- வீராங்கனை தேர்வு

மயிலாடுதுறை, நாகை மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிக்கான வீரர், வீராங்கனை தேர்வு மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும், தமிழ்நாடு தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி, செப்டம்பர் மாதம் 14-ந் தேதி நாமக்கல்லில் தொடங்குகிறது. மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்-வீராங்கனைகள், கோவையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவார்கள். இந்த தடகளப் போட்டியானது, 4 பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல்...

20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 12.11.2003 முதல் 11.11.2005-க்குள் பிறந்தவர்களுக்கும், 18 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 12.11.2005 முதல் 11.11.2007-க்குள் பிறந்தவர்களுக்கும், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 12.11.2007 முதல் 11.11.2009 க்குள் பிறந்தவர்களுக்கும், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 12.11.2009 முதல் 11.11.2011-க்குள் பிறந்தவர்களுக்கும் நடைபெறவுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள வீரர் வீராங்கனைகள், மேலும் விவரங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் செழியனை 9655466213 என்ற எண்ணிலும், உடற்கல்வி ஆசிரியர் வினோத்தை 9080756085 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும், செப்டம்பர் 2-ந் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்ததகவலை மயிலாடுதுறை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன், செயலர் செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்