< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
குளத்து மண் கடத்திய லாரிகள் பறிமுதல்
|16 Oct 2022 12:15 AM IST
திருச்செந்தூர் அருகே குளத்து மண் கடத்திய லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மெஞ்ஞானபுரம் அருகே குளத்தில் இருந்து மண்ணை ஏற்றி கொண்டு வந்த 2 டிப்பர் லாரிகள் வந்தன. இந்த லாரிகளை மறித்து சோதனையிட்டதில் அனுமதியின்றி மண் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த பாலமுருகன், பத்மனேரி வேலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்து (வயது 47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து குளத்து மண்ணுடன் 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.