< Back
மாநில செய்திகள்
மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அந்த கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது குருசடி வீட்டு விளையை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவருடைய கடையில் 436 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 ஆயிரத்து 500 ஆகும். உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்