< Back
மாநில செய்திகள்
மளிகைக்கடைகளில் புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மளிகைக்கடைகளில் புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
25 Jun 2022 12:37 AM IST

குன்னத்தூர் மளிகைக்கடைகளில் புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விராலிமலை ஒன்றிய சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் மற்றும் ராசநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மாரிக்கண்ணு உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் நேற்று குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நசரேத், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பல்வேறு கடைகளில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுகாதாரதுறை அலுவலர்கள் அவற்றை அப்பகுதியில் கொட்டி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கும் முககவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கார்த்திக், பாலமுருகன், விக்னேஷ், ராகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்