< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
|22 Oct 2023 1:33 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணன் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுந்தரபாண்டியத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 122 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.