< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கடைகளில் புகையிலை, பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|22 Oct 2022 3:02 AM IST
கடைகளில் புகையிலை, பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தக்கலை:
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட மேட்டுக்கடை, தர்கா ரோடு, புலியூர்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததோடு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் அபராதமாக ரூ.7 ஆயிரம் வசூலானது.