< Back
மாநில செய்திகள்
மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்
தர்மபுரி
மாநில செய்திகள்

மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
4 Feb 2023 1:00 AM IST

மொரப்பூர்:-

தர்மபுரி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் மொரப்பூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றார். கத்தாங்குளம் அருகே அரசு அனுமதி இல்லாமல் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். உடனே புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், லாரியை மீட்டு மொரப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்