< Back
மாநில செய்திகள்
அதிவேகமாக வந்த லாரி பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி பறிமுதல்

குளச்சல்,

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் களியங்காடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மது பாட்டில்கள் ஏற்றிய ஒரு லாரி அதி வேகமாக வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது போதையில் அதிவேகமாக லாரியை ஓட்டிய டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்