< Back
மாநில செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மண் கடத்திய லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
9 April 2023 10:41 PM IST

நெமிலி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நெமிலி தாலுகா, சம்பத்துராயன் பேட்டை கிராமத்தில் நேற்று இரவு நெமிலி போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சாமிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சம்பத்துராயன் பேட்டை தடுப்பணை அருகே அனுமதி இல்லாமல் லாரியில் கிராவல் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பியோடி விட்டனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்