நாமக்கல்
மண் கடத்திய லாரி பறிமுதல்
|வெண்ணந்தூர் அருகே மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் அடுத்து பொன்பரப்பிப்பட்டி பகுதியில் கிராவல் மண் வெட்டி டிப்பர் லாரியில் கடத்துவதாக சேலம் மண்டல பறக்கும் படைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது டிப்பர் லாரியில் கிராவல் மண் அள்ளிக்கொண்டு பொன்பரப்பிப்பட்டிலிருந்து வெண்ணந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. சேலம் மண்டல பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் குழுவினர் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் லாரியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து கிராவல் மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரி உரிமையாளர் கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் தினேஷ் (வயது31) என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.