< Back
மாநில செய்திகள்
மணல் அள்ளிய சரக்கு வேன் பறிமுதல்
தேனி
மாநில செய்திகள்

மணல் அள்ளிய சரக்கு வேன் பறிமுதல்

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

போடியில் மணல் அள்ளிய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள கொட்டக்குடி ஆற்றில் ஒருவர் சரக்கு வேனில் மணல் அள்ளி கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்டதும் அவர் தப்பி ஓடினார். இதையடுத்து சரக்கு வேன் மற்றும் 20 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்