< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் குழாய்கள் பறிமுதல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் குழாய்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
18 Aug 2023 12:15 AM IST

ஆறுமுகநேரி பகுதியில் தெரு குழாய்களில் பொருத்தி தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் தங்களது வீடுகளுக்கு விதிகளை மீறி தெரு குழாய்களில் நீண்ட பிளாஸ்டிக் குழாய்களை பொருத்தி தண்ணீர் எடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் மற்றும் துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பெரியான்விளை, செல்வராஜபுரம், கீழநவலடிவிளை, கீழசண்முகபுரம் உள்ளிட்ட பல இடங்களில் 15-க்கும் மேற்பட்ட தெரு குழாய்களில் பிளாஸ்டிக் குழாய்களை பொருத்தி வீடுகளுக்கு தண்ணீர் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வீடுகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, பிளாஸ்டிக் குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் பேரூராட்சி பகுதிகளில் இதுபோன்று சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், தெரு குழாய்களில் வீதிமுறைகளை மீறி தண்ணீர் எடுத்தால் அபராதம் மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயல்அலுவலர் கணேசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்