< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
பாறை உடைக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல்
|27 Aug 2023 1:23 AM IST
அருமனை அருகே பாறை உடைக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல்
அருமனை,
அருமனை அருகே சிதறால் துண்டதாறாவிளை பகுதியில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பாறை உடைப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அங்கு நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரம், கம்ப்ரசர் எந்திரம் மற்றும் டெம்போ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ரெஜி, பிரமோத், சஜின், ஸ்டாலின் பிரேம்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.