< Back
மாநில செய்திகள்
சிவகங்கையில் தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்
மாநில செய்திகள்

சிவகங்கையில் தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
16 July 2022 3:31 AM IST

மானாமதுரை அருகே தென்னந்தோப்பில் மூட்டை மூட்டையாக பதுக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்குள்ள தென்னந்தோப்பில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அய்யனார் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்