< Back
மாநில செய்திகள்
கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்
சிவகங்கை
மாநில செய்திகள்

கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
14 Dec 2022 6:45 PM GMT

கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மீன் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சரவணன், கணேசன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 கடைகளில் ஐந்து வகையான கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த நிலையில் இருந்த சுமார் 300 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மீன்கள் கன்னியாகுமரி, ராமேசுவரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். கெட்டுப்போன மீன்கள் மற்றும் தரம் குறைவான மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ மீன்களையும் பேரூராட்சி குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது. கெட்டுப்போன மற்றும் தரம் குறைவான மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்