< Back
மாநில செய்திகள்
முறையான அறிவிப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்ற சிகரெட் லைட்டர்கள் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

முறையான அறிவிப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்ற சிகரெட் 'லைட்டர்'கள் பறிமுதல்

தினத்தந்தி
|
11 July 2022 3:02 PM IST

ஆய்வின்போது, முறையான அறிவிப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்பட்ட சிகரெட் ‘லைட்டர்’கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படியான அறிவிப்புகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை முதல் வட்ட தொழிலாளர் இணை கமிஷனர் உத்தரவின் பேரில் சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் தலைமையிலான தொழிலாளர் துறை ஆய்வர்கள் பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் சட்டமுறை எடை அளவுகள் (பொட்டல பொருட்கள்) தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, முறையான அறிவிப்புகள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்பட்ட சிகரெட் 'லைட்டர்'கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படியான அறிவிப்புகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதிகள் 2011-ன் கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாமல் பொட்டல பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. இதில் முரண்பாடு காணப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்