< Back
தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை
தமிழக செய்திகள்
மண் கடத்த பயன்படுத்திய பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்

15 Sept 2022 11:48 PM IST
மண் கடத்த பயன்படுத்திய பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
திருவலம் அருகே உள்ள ஏரந்தாங்கல் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று ஏரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் ஏரந்தாங்கல் ஏரிக்கு சென்று அங்கு மண் கடத்தியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, மண் கடத்தியவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை அங்கேயே விட்டு, விட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து ஏரந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு, பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து திருவலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.