< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி இயக்கிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
நீலகிரி
மாநில செய்திகள்

அனுமதியின்றி இயக்கிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

தினத்தந்தி
|
20 Sept 2023 12:30 AM IST

குன்னூர் அருகே அனுமதியின்றி இயக்கிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

குன்னூர்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்ட விதிமுறைகள் உள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட காந்தி பேட்டை பகுதியில் தனியார் சாலை அமைக்க பொக்லைன் எந்திரம் பயன்படுத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ஆர்.டி.ஓ. பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம் உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் தீபக் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் இயக்கியது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் பொக்லைன் எந்திர உரிமையாளரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்