< Back
மாநில செய்திகள்
எடப்பாடி அருகே  ரசாயன முறையில் பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
சேலம்
மாநில செய்திகள்

எடப்பாடி அருகே ரசாயன முறையில் பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
25 Jun 2022 9:43 PM GMT

எடப்பாடி அருகே ரசாயன முறையில் பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எடப்பாடி,

எடப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் தலைமையில் பணியாளர்கள், எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு, காந்தி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான காய்கறி, பழக்கடையில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பழக்கடையில் ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரசாயன பவுடர் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் கெட்டுப்போன, அழுகிய நிலையில் இருந்த அவரைக்காய் 13 கிலோ, காலி பிளவர் 7 கிலோ, கொத்தவரைக்காய் 6 கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை கண்டிப்பாக விற்க கூடாது எனவும் மீறி விற்கப்பட்டால் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் எச்சரித்தார்.

மேலும் செய்திகள்