< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்
|27 March 2024 3:04 AM IST
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வியாழக்கிழமை) முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
அவருடைய முதற்கட்ட தேர்தல் பிரசார பயண விவரம் வருமாறு:- நாளை (வியாழக்கிழமை)- கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, 29-ந்தேதி - நெல்லை, தென்காசி, விருதுநகர், 30-ந்தேதி - தூத்துக்குடி, ராமநாதபுரம், 31-ந்தேதி - சிவகங்கை, மதுரை, ஏப்ரல் 1-ந்தேதி தேனி, திண்டுக்கல், 2-ந்தேதி- கரூர், திருச்சி. வாகனங்கள் மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.