< Back
மாநில செய்திகள்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
7 Feb 2023 12:15 AM IST

திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

திண்டிவனம்

திண்டிவனம் தொப்பையன் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சூரியகுமார்(வயது 22). வானூர் தாலுகா ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் மகள் புகழேந்தி(21). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் படித்த போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு புகழேந்தின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காதலர்கள் இருவரும் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்ததை அடத்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்இதில் புகழேந்தியின் பெற்றோர்கள் வராததால்சூரியகுமார் பெற்றோருடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்