< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
50 சதவீத மானியத்தில் விதைகள்
|17 Jun 2023 2:03 AM IST
50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகிறது.
காரியாபட்டி,
நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நரிக்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின்விசைத்தெளிப்பான், தார்பாய், 5 வகையான விவசாய பண்ணை கருவி அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மேலும் நரிக்குடி வட்டார விவசாயிகளுக்கு நெல் மற்றும் நிலக்கடலை விதைகள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஆகவே நரிக்குடி வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து உரங்கள், பண்ணை கருவிகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.