< Back
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
6 Jun 2023 12:15 AM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகளை நடுமாறு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டு இருந்தார். மேலும் அந்த மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் பூபதி முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோல் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரக்கன்றுகளை, துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு நட்டு வைத்தார்.

இதனிடையே நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 24 போலீஸ் நிலையங்கள், 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மற்றும் 4 துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்