திருவள்ளூர்
குடும்ப தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|குடும்ப தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்து வந்தார். சுரேஷ் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் சுரேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் மனைவி பவானி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தன் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடந்த சம்பவம் குறித்து பவானி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.