< Back
மாநில செய்திகள்
ஜி-20 மாநாடு பிரதிநிகள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு பிரதிநிகள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
29 Jan 2023 4:14 PM IST

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், வரும் பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.

செங்கல்பட்டு,

ஜி-20 உச்சிமாநாடு வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர ஓட்டல், கிண்டி ஐ.ஐ.டி ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த மாநட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 150 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், வரும் பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தர உள்ளனர்.

இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் அதன் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள், பைகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் தீவிரமாக பிசோதித்த பிறகே புராாதன சின்னங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்