ராமநாதபுரம்
வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு செயலாளர் ஆய்வு
|ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு செயலாளர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கணிப்பாய்வு அலுவலர் அரசு செயலாளர் நந்தகுமார் தலைமையில், கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படுவதை பார்வையிட்டார். தேவேந்திரநல்லூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.22 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார். ஆய்வு பணிகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வருவாய் கோட்டாட்சியர் கோபு, மகளிர் திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.