< Back
மாநில செய்திகள்
பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா... விடுதி ஊழியர் செய்த காரியம் - நீலகிரியை உலுக்கிய பகீர் சம்பவம்
நீலகிரி
மாநில செய்திகள்

பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா... விடுதி ஊழியர் செய்த காரியம் - நீலகிரியை உலுக்கிய பகீர் சம்பவம்

தினத்தந்தி
|
18 Aug 2023 7:51 PM IST

உதகை அருகே விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, பெண்களை வீடியோ எடுத்ததாக விடுதி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

உதகை அருகே மசினகுடி பகுதியில், சுற்றுலா பயணிகளுக்காக 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. அதில், ஆச்சக்கரை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சம்பந்தப்பட்ட விடுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது, விடுதியின் கழிவறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விடுதி ஊழியரான சிண்டு என்பவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்