< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
|11 Dec 2023 5:35 AM IST
பாரதியாரின் இலக்கியம் மற்றும் பொது வாழ்வு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் பாரதி திருவிழா 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு இந்த ஆண்டுக்கான பாரதி விருதை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் இருக்கைகள் இல்லாமல் உள்ளது. பல்வேறு தலைவர்கள் பெயரில் இருக்கைகள் உள்ள நிலையில் பாரதியார் பெயரிலும் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து விழாக்களிலும் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, பாரதியாரின் பாருக்குள் நம்ம நாடு பாடல் நிச்சயம் இடம்பெற்று வருகிறது.
தமிழகத்தில் பாரதியார் குறித்த ஆய்வுகள் பெரியளவில் குறைந்துள்ளது. அவரது இலக்கியம் மற்றும் பொது வாழ்வு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.