< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளுக்கு ரூ.35 லட்சத்தில் இருக்கைகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு ரூ.35 லட்சத்தில் இருக்கைகள்

தினத்தந்தி
|
22 Jun 2022 11:54 PM IST

அரசு பள்ளிகளுக்கு ரூ.35 லட்சத்தில் இருக்கைகள்

பரமக்குடி

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. அதை வழங்கும் நிகழ்ச்சிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கினார். நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி, பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பரமக்குடி நகர் துணைச் ெசயலாளர் மும்மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்