< Back
மாநில செய்திகள்
அடையாறு ஆற்றில் மூழ்கிய மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

அடையாறு ஆற்றில் மூழ்கிய மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
18 Dec 2022 10:12 AM IST

தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சென்னை,

சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்