திருவாரூர்
6 கடைகளுக்கு சீல் வைப்பு
|திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
தேடுதல்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட முழுவதும் 85 வழக்குகள் பதிவுசெய்து 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீல் வைப்பு
குறிப்பாக தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்த திருவாருர், நன்னிலம், முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.