திருவாரூர்
6 கடைகளுக்கு சீல் வைப்பு
|மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மன்னார்குடி;
மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன. இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.