< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
|18 Jun 2023 5:29 PM IST
அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அனுமதியின்றி சிலர் நிலத்தடி நீர் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிலநீர் தடுப்பு கண்காணிப்பு குழுவிற்கு அளிக்கப்பட்ட பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட 6 ஆழ்துளை கிணறுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.