< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு
|9 Sept 2023 12:45 AM IST
சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தவில்லை. இதனால் நேற்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வரி பாக்கி செலுத்தாத 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் பல்வேறு கடை உரிமையாளர்களிடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை செலுத்துமாறு அறிவுறுத்தினர். அப்போது மேலாளர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.