< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
|25 May 2022 10:52 PM IST
ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார் மற்றும் அலுவலர்கள் இன்று ஆரணியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பழைய, புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பெட்டிக் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர்.
புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.