< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்த கடைக்கு சீல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்த கடைக்கு சீல்

தினத்தந்தி
|
25 Oct 2023 1:15 AM IST

பர்கூர் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பர்கூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் சரயு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கண்காணிக்க அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி பகுதியில் பட்டாசு கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கடையில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து கடையில் வைத்திருந்த பட்டாசுகளை கந்திகுப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் பட்டாசுகளை அனுமதியின்றி வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்