< Back
தமிழக செய்திகள்
அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல் - வருவாய் துறையினர் நடவடிக்கை
திருவள்ளூர்
தமிழக செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு 'சீல்' - வருவாய் துறையினர் நடவடிக்கை

தினத்தந்தி
|
8 July 2023 3:55 PM IST

அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம் செல்லும் சாலையில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த அப்பு என்பவர் உரிய அனுமதி இல்லாமல் வணிகத்திற்காக நாட்டு வெடிகள், பட்டாசுகள் ஆகியவற்றை ஒரு குடோனில் சேமித்து வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் நாட்டு வெடிகள், பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்பொழுது அப்பு என்பவர் உரிய அனுமதியின்றி 25 கிலோ நாட்டு வெடிகள், பண்டிகை மற்றும் திருவிழா மற்றும் ஈமச்சடங்குகளில் பயன்படுத்தும் பட்டாசுகள் ஆகியவற்றை சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் முன்னிலையில் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு வருவாய் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்