< Back
மாநில செய்திகள்
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
5 Feb 2023 10:46 AM IST

அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அம்பத்தூர் கல்யாணபுரம், பூம்புகார் நகரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டிடமானது சென்னை மாநகராட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதாவது 2 தளங்கள் கட்டுவதற்கான அனுமதி பெற்று கூடுதலாக 1 தளம் சேர்த்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்தும் உரிய பதில் அளிக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாநகராட்சி சார்பில் அம்பத்தூர் மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் விற்பனைக்கு தயாராக இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்