< Back
மாநில செய்திகள்
சத்துணவு முட்டை வைத்திருந்த ஓட்டலுக்கு `சீல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சத்துணவு முட்டை வைத்திருந்த ஓட்டலுக்கு `சீல்'

தினத்தந்தி
|
1 Oct 2023 12:18 AM IST

சின்னசேலத்தில் சத்துணவு முட்டை வைத்திருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சின்னசேலம்,

சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஓட்டலில் 90 சத்துணவு முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அந்த முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, ஓட்டல் உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய சத்துணவு முட்டை எப்படி விற்பனைக்கு வந்தது என்பது பற்றி அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரில் சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்