திருச்சி
விளையாட்டு பயிற்சி கூடத்திற்கு 'சீல்'
|விளையாட்டு பயிற்சி கூடத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி அண்ணாமலை நகர் பிரதான சாலையில் அனுமதியின்றி கட்டிடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி கூடம், புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி தற்போது செயல்பட்டு வந்தது. இங்கு கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்திற்கும், விளையாட்டு பயிற்சி கூடத்திற்கும் திருச்சி மாநகராட்சியிடம் கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிட உரிமையாளருக்கு 30 நாட்களுக்கு முன்பு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நோட்டீசுக்கு எந்தவித பதிலும் அளிக்காத காரணத்தால், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்ட பிரிவின்படி அந்த கட்டிடத்திற்கு 'சீல்' வைக்க மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அந்த விளையாட்டு பயிற்சி கூடத்திற்கு சென்று, கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.