< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வாடகை பாக்கியுள்ள கடைக்கு 'சீல்'
|5 March 2023 12:00 AM IST
வாடகை பாக்கியுள்ள கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அலுவலர்கள் நேரில் சென்று கேட்டும் பணம் வசூலாகவில்லை. இதேபோல் நகரில் உள்ள பல வீடுகளில் கொள்ளிடம் குடிநீர் இணைப்பிற்கு வரி பாக்கி வைத்துள்ளனர். பலமுறை கூறியும் பணம் வசூலாகாததால், பஸ் நிலையத்தில் வரி பாக்கியுள்ள ஒரு கடை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளிடம் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.